Latestமலேசியா

‘பெண் காதலன்’ மீது கோபம்; பிள்ளைகளைத் துன்புறுத்திய அம்மா

கப்பளா பாத்தாஸ், ஆக. 1 – தாய் ஒருவர் தனது காதலனுடன் ‘டோம்பாய்’ (ஆண் தன்மைக்கொண்ட பெண்) சண்டை ஏற்படும் போதெல்லாம் தனது மூன்று குழந்தைகளின் மீது கோபத்தைக் காட்டும் வகையில் அடித்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

கடந்த நான்கு மாதங்களாக 12 வயது குழந்தையான மூத்த மகள், தன்னையும் தனது எட்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு உடன்பிறப்புகளையும் தங்களின் தாயார் துன்புறுத்தி வந்ததாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, 32 வயதான தாயார் கைது செய்யப்பட்டார். அவரது 33 வயது காதலனும் நேற்று பிற்பகல்  3.40 மணியளவில் பட்டர்வொர்த்தில் கைது செய்யப்பட்டதாக  வடக்கு செபராங் பிறை  மாவட்ட காவல்துறை (ஏசியு) ஏசிபி நூராரனி முகமட் நூர் தெரிவித்தார்.

தனது 33 வயதான கணவரை வீட்டிலிருந்து வெளியேற்றிய பின்னர், கடந்த நான்கு மாதங்களாக மூன்று குழந்தைகள், தாய் மற்றும் காதலனுடன் வசித்து வந்ததாக நூராரனி கூறினார்.

பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த இரு உடன்பிறப்புகளை ஆசிரியர்கள் விசாரித்ததில், தங்களின் தாயாரால் எப்போதும் அடிக்கப்பட்டு வருவதைக் கண்டறிந்தனர்.

ஒவ்வொரு முறையும் அவரது தாயார் தனது காதலனுடன் சண்டை போடும்போது, ​​குழந்தைகள் பெரும்பாலும் வார்பட்டையால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் காதலனும் அவர்களைத் தாக்கியதாக போலீசார் உறுதிபடுத்தினர்.

மூன்று குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களில் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததாகவும் தெரிவித்தனர்.

சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) இன் கீழ் துஷ்பிரயோகத்திற்காக தாயாரும் அவரது காதலனும் இப்போது பட்டர்வொர்த்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker