Latestமலேசியா

மின்னியல் டாக்சி ஓட்டுநரின் மீது – 11 ஆள்கடத்தல் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆக. 1 – ஆள் கடத்தல் சம்பந்தமாகப் பகுதி நேர மின்னியல் அழைப்பு ஓட்டுநர் ஒருவர் மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் விபச்சார நடவடிக்கைக்காக 10 வங்காளதேச மற்றும் ஓர் இந்திய பெண்ணையும் கடத்தியதாக சூ லியான்(வயது 40) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

காணாமல் போயிருக்கும் இன்னொரு நபரோடு சேர்ந்து, சூ இந்தியப் பெண் அடங்கிய 10லிருந்து 31 வயதுடைய 8 பெண்களை டாங் வாங்கி, ஜாலான் துன் தான் சியூ சின்னில் ஜுலை 4ஆம் தேதி காலை 10.40 மணியளவில் கடத்தியதாகச் சொல்லப்பட்டது.

சூ மேலும் 20லிருந்து 37 வயதுடைய 3 பெண்களையும் விபச்சாரத்திற்காக கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

50,000 ரிங்கிட் பிணையில் சூ லியான் விடுவிக்கப்பட்டார். மாதத்தின் முதல் வாரத்தில் அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker