Latestஉலகம்

மூளை நினைப்பதை இனி தட்டச்சு செய்ய முடியும் :-பேஸ்புக்  அசத்தல்! 

கலிபோர்னியா, ஆக. 1- சமூகவலைத்தளங்கள்  வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அந்த வரிசையில் தற்போது மனிதர்கள் நினைப்பதை  தானாகவே டைப் செய்ய கூடிய தொழில் நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம் பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ளது. தற்போது ‘மூன் சூட் ‘ எனும் திட்டத்தின் கீழ் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை A1விஷேச  கண்ணாடி ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

மேலும் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக நிமிடத்திற்கு 100 சொற்கள் டைப் செய்ய வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது. இந்த வேகமானது சாதாரணமாக ஒரு மொபைல் சாதனங்களில் தட்டச்சு செய்யும் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker