Latestமலேசியா

எனது சொத்துகள் உழைத்து சம்பாதிக்கப்பட்டவை – டான்ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர், ஆக. 2 – தமது சொத்துகள் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அது பொறாமையினால் தான் என ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

தாம் இளைஞராக இருந்தபோது கடின உழைப்பால் சொத்துகள் சேர்க்கப்பட்டதாகவும் வயர்மேன், மீட்டர் ரீடர், தொழில்நுட்ப உதவியாளர் அதன் பின்னர் குத்தகையாளராக இருந்தபோது சொத்துகள் சேர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

துன் சாமிவேலுவின் காலத்தில் அரசு குத்தகைகளின் மூலம் வருமானத்தைத் தேடியதாகவும் தாம் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலய பணத்தைக் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அபத்தம் எனவும் அவர் வர்ணித்தார்.

பத்துமலை ஆலயத்தின் அறங்காவலர்களாக மூவர் இருக்கும்போது, அதன் சொத்தினை எவ்வாறு அபகரிக்க முடியும்.

75 வயதான நடராஜா, தமக்குப் பின், தமது மகனை ஆலய தலைவராக்க முனைவதாகக் கூறப்படும் குற்றச்சசாட்டை மறுத்த அவர், மகனுக்கு திறமை இருந்தால், தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவிக்கு வர வேண்டும் என குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டில் ஆலய நிலம் சம்பந்தமாக ஆலயத்தின் 3 பேர் கைது செய்யப்பட்டு ஊழல் தடுப்பு ஆணையத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

ஶ்ரீமகா மாரியம்மன் அலுவலகம் எம்ஏ சிசியினால் சோதனை இடப்பட்டது குறிப்பிடத்தகது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker