Latestவாழ்க்கை

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த ஜோதி: தற்போதைய நிலை !

வாஷிங்டன், ஆக.2- அமெரிக்காவின் பிறப்புறுப்பு ஏதுமின்றி வளர்ந்த சிறுமி தற்போது  மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோதி கம்பில் ரிட்.  தற்போது 18 வயதாகும் ஜோதி பிறப்புறுப்பு ஏதுமின்றி பிறந்தாலும் அவர்  தம்மை ஒரு பெண் என நினைத்து இதுநாள் வரை வளர்ந்துள்ளார்.

மட்டுமின்றி அவரது வளர்ப்பு பெற்றோர் ஜோதியின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவும் இல்லை காரணம் ஜோதியை தத்தடுத்தவர்கள் திருநங்கை தம்பதியர்கள்.

பிறப்புறுப்பு இல்லையென்றாலும்  பெண்ணாக தன்னை நினைக்கும் ஜோதி சில காலமாக தொடர்ந்து ஈஸ்ட்ரோஜென் எடுத்துக் கொள்கிறார். தன்னை ஒரு பெண் என கருதுவதால் எந்தப் பாலினம் என்ற கேள்விக்கு முக்கியத்துவம் இல்லை என அழுத்தமாக பதிலளிக்கும் ஜோதி தற்போது பால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.

மேலும் பெண்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அவர் தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி ஆண் நண்பர்களுடன் டேட்டிங் செய்துகொள்ளும் ஜோதி தமது நிலை தொடர்பில் முன்னரே அவர்களிடம் சொல்லி விடுவதாகவும் அதில் தமக்கு எந்த சிக்கலும் இல்லை என பதிலளித்துள்ளார்.

மட்டுமின்றி  பெண்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் அவருக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் .

இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிறந்த ஜோதியை அவரது இந்த நிலை தொடர்பில் தெரிய வந்த அமெரிக்க திருநங்கை தம்பதியர் முழு மனதுடன் தத்தெடுத்துள்ளனர் .

தற்போது ஜோதியின் பால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வரவேற்றுள்ள இருவரும் அவரது முடிவில் தங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனது வளர்ப்பு பெற்றோருக்கு நன்றி கூறும் ஜோதி அவர்களால் மட்டுமே தாம் இதுநாள்வரை உயிர் வாழ்ந்துள்ளதாகவும்   தமது இந்த நிலையை எவரும் ஏற்றுக் கொள்வது கடினம் எனவும் பதிவு செய்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker