Latestமலேசியா

வாடகை கார் ஓட்டுனரிடம் கைவரிசை; ஐவர் கைது

கோலாலம்பூர், ஆக.2 – ஆன்லைன் வாடகை கார் ஓட்டுனரிடம், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 10.30 மணியளவில் பண்டார் துன் ரசாக் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் கத்தியைக் கொண்டு கார் கண்ணாடியை உடைத்து கார் ஓட்டுனரிடமிருந்து ரொக்கம் ரிம. 200, கைப்பேசி மற்றும் ஆவணங்கள் முதலியவற்றைக் கொள்ளையடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, அந்த ஐவர் பயன்படுத்திய மோட்டர் காணாமல் போனதாக முன்னதாக புகார் கிடைக்கப்பெற்றதாக செராஸ் போலீஸ் தலைவர் முகமட் மோக்சைன் முகமட் சோன் தெரிவித்தார்.

சாலாக் செலாத்தான் பாரு அருகே 24 முதல் 31 வயதிற்கு உட்பட்ட அந்த  ஐவரையும் கைது செய்ததாக அவர்  குறிப்பிட்டார். அத்துடன் 6 கைத் தொலைபேசிகள், ஆன்லைன் வாகன ஓட்டுனரின் பை, 2 பாராங்கத்தி, ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ரிம.1500 ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அந்த ஐவருக்கும்  போதைப் பொருள், திருட்டுக் குற்றங்கள் இருப்பதாக முகமட் மோக்சைன் தெரிவித்தார்.

1952 போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 12(2) , செக்‌ஷன் 15(1) மற்றும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395, செக்‌ஷன் 297, செக்‌ஷன் 379 (ஏ) இன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker