Latestவாழ்க்கை

இன்று ஆடி பூரம் ! தருவாள் ஆண்டாள் பூர்ண வரம்!

இன்று ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை தரிசிப்போர் அவளின் பேரருளைப் பெறுவர். ஆடி மாதத்தின் முக்கியமான வைபவங்களில் ஆடிப்பூரமும் ஒன்று.  ஆடி 18 என்றும்,ஆடி பெருக்கு  என்றும் கூறுவர்.

ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம் .இந்ந நன்னாளில் ஆடிமாத பூர  நட்சத்திர நாளில் சுமங்கலிகளுக்கு  வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம் ,வெற்றிலை, பாக்கு வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதிகம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை .

அதுமட்டுமின்றி பெருமாள் குடியிருக்கும் ஆலயங்கள் பலவற்றிலும் இந்நன்னாளில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் கோலாகலமாக நடைபெறும்.  அனைத்து ஆலயங்களிலும்  வழிபாடுகள் நடைபெறுவதுடன் பிரசாதமும் தரப்படும். வளையல்களும் தருவர்.

அந்த வளையல்களை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கினால் பெண்கள் கைகளில் அணிந்து கொண்டாலோ சர்வ மங்களம் பெருகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.

இந்த முறை ஆடிப்புரம் ஆடிப்பெருக்கு நாளில்  இன்று ஆகஸ்ட் 3 2019 சனிக்கிழமை  என்பது கூடுதல் விசேஷம். ஆகவே ஆண்டாளை தரிசனம் செய்யுங்கள். அம்மன் கோயிலில் வழிபடும் போது வளையல் வாங்கி கொடுங்கள்.ஆடிப்புரம் தினத்தன்று  ஆண்டாளை தரிசிப்பது என்பது  பூர்ண வரம் பெறுவதற்கு ஒப்பாகும்.

இந்த விழாவை 18ம் தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும். இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம்.

இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது. அதனால், இந்நாள் நகை  முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் சுமங்கலிப்பெண்கள் புது மஞ்சள் கயிற்றை மாற்றிக். கொள்வார்கள்  மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும். புதிய  படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker