Latestசினிமா

சினிமா காட்சியில் சன்னி லியோன் சொன்ன போன் நம்பரால் :- வாலிபர் பாதிப்பு!

மும்பை,ஆக.3- சினிமா காட்சியில் சன்னி லியோன் சொன்ன போன் நம்பரால் வாலிபருக்கு தினமும் 100 தொலைபேசி அழைப்பிதழ் வருவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய இருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார் .

இவருக்கு அனைத்துலக அளவில் ரசிகர்கள் ஏராளம். ரோஹித் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அர்ஜுன் பாட்டியலா படம் கடந்த 2 நாட்களுக்கு முன் திரைக்கு வந்தது. சர்மா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார் .

அர்ஜுன்  பாட்டியாலா படத்தில் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார் .அந்த போன் நம்பர் சன்னி லியோன் உடையது என்று தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர் .

சுமார் நூற்றுக்கும் அதிகமான போன்கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த நம்பருக்கு சொந்தமான புனித் அகர்வால் என்ற வாலிபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திரைப்படங்களில் பிரபல நடிகர் நடிகைகள் யாருக்காவது செல்போன் எண்ணை சொல்வது போல் காட்சி வந்தால் உபயோகத்தில் இல்லாத நம்பராக சொல்லுவது வழக்கம். ஆனால் இந்த படத்தில் புழக்கத்திலிருக்கும் என் நம்பர் பயன்படுத்தப்பட்டது. சிக்கலாக இருக்கிறது படத்தில் சன்னி லியோன் சொன்னது அவரது உண்மையான போன் நம்பர்  என்றெண்ணி தினமும் 100 போன்கால்கள்  வருகிறது .இது சன்னி லியோன் நம்பர் இல்லை என்று சொல்லி சொல்லி நான்  நொந்து போய் விட்டேன். இந்த தொல்லையிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிக்கும் புனித் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாட முடிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “சாரி. உங்களுக்கு நடக்க வேண்டும் என நினைத்து நான் இதை செய்யவில்லை. யாரோ இண்ட்ரஸ்டிங்கானவர்கள்தான் இப்படி உங்களுக்கு கால் செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து புனித் போலீஸிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவார் எனக் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker