Latestமலேசியா

சிம்பாங் பூலாய் வாகன விபத்து: 8 பேர் காயம்

ஈப்போ, ஆக. 4 – சிம்பாங் பூலாயிலிருந்து கேமரன் மலைக்குச் செல்லும் சாலையில் நடந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு நேர்ந்த அந்த விபத்தில் இருவர் கடுமையான காயத்துக்கு ஆளானதாக தீயணைப்பு, மீட்புக் குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த விபத்தில் ஒரு தோயோத்தா ஹீலக்ஸ், ஒரு பெரோடுவா அக்சியா மற்றும் மிகைவேக மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டுள்ளன.

ஹீலக்ஸ் வாகனத்தில் இருந்த 5 பேரில் நால்வர் காயமடைந்தனர்.மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருந்தவரும் கடுமையான காயத்துக்கு ஆளாயினர்.

ஆக்சியா காரில் இருந்த இரு பெண்களும் காயமடைந்தனர். மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்த பின்னர், காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker