Latestமலேசியா

உணவகத்தில் நாய் இறைச்சி விற்பனை ; போலீசார் அதிரடி சோதனை

நீலாய், ஆக. 5 – கம்போங் பாரு, புரோகா உணவகத்தில் நாயின் இறைச்சி விற்கப்படுவது போலீஸ் படை சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று, பொதுமக்கள் அளித்த தகவலின் படி அந்த உணவகத்தில் போலீஸ் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அக்கடையின் உரிமையாளர் வழக்கத்திற்கு மாறான உணவு வகைகளை விற்கும் உரிமத்தை வைத்துள்ளார் என்பது  இச்சோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த நாய் இறைச்சியை உண்பதன் மூலம் ‘ஆஸ்துமா’ நோய் குணமடையும் என நம்பப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் நாய் இறைச்சி  விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அக்கடையில், பல துண்டு நாய் இறைச்சிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அது காவல் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே அந்த கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை முழுமைப் பெற்றதும் சம்பந்தப்பட்ட இலாகாவிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் தனது கடைக்கு நாய்  இறைச்சிகளை விநியோகம் செய்யும் நபர் குறித்த தகவலை தெரிவிக்க அந்த கடைக்காரர் மறுத்து விட்டார்.  இருந்த போதிலும் அந்நபரை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என மாவட்ட போலீஸ் அதிகாரி முகமட் நூர் மசுக்கி பெசார் தெரிவித்தார்.

இதற்கிடையில், அக்கடையின் உரிமையாளார் வழக்கத்திற்கு மாறான உணவு வகைகளை விற்கும் உரிமத்தை பெற்றிருந்தாலும், அதில் நாய்கள் இறைச்சிகள் சேர்க்கப்படாது என்று நெகிரி செம்பிலான் வனவிலங்கு இலாகா அதிகாரி வான் மாட் வான் ஹருன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker