Latestசினிமா

கோமாளி படத்தில் ரஜினியை இப்படியா கிண்டலடிப்பீர்கள் கமல் ஆவேசம்!

சென்னை,ஆக.5- ஜெயம் ரவியின் கோமாளி பட டீசரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்து இருப்பதை கமல் உடனே தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து தனது கண்டனத்தை பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகிபாபு என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நடித்திருக்கும் இந்தப் படம் கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் .

விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு ஏழும் ஜெயம்ரவி, யோகிபாபுவிடம் இது எந்த வருடம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்து விட்டதாக பேசும் டிவி காட்சி ஒன்றை காட்டுகிறார்.

உடனே அதையே காரணமாக வைத்து 1996 நான் நம்ப மாட்டேன் என்பார். அதாவது1996 லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பிலிருந்து ரஜினி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடிக்கிறார்கள்.

இந்த சர்ச்சையால் வெளியான இந்த டீஸர் ஒரே நாளில் 16 லட்சம் பார்வையாளர்களை கடந்த நிலையில் தங்கள் தலைவரை தரைமட்டமாக்கி தாக்கிஉள்ளதாக #Boycottcomali@ Rajinikanth EFans என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை ரஜினி ரசிகர்கள் தாக்கி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பால் ல் அக்காட்சியை நீக்க போகிறார்களா அல்லது படத்தில் அப்படியே இடம் பெறுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த ட்ரைலரை பார்த்து கமல்கொதிப்படைந்திருப்பதாக மக்கள் நீதி மையம் கட்சியின் செய்தியாளர் முரளி அப்பாஸ் செய்துள்ளார் .
அதில் அவர்,ரஜினி அரசியல் வருவதைப் பற்றிய விமர்சனத்தை பார்த்தவுடனே தயாரிப்பாளர்களுக்கு போன் செய்த கமல், இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடாக நியாயத்தின் குரலாக என்று முரளி அப்பாஸ் பதிவிட்டுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker