Latestமலேசியா

வீட்டினுள் புகுந்த முதலை – பிடிபடாமல் தப்பித்து ஓடியது

சரிக்கே, ஆக. 5 – ஜாலான் பாஜியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், நேற்று தங்கள் வீட்டின் சமையலறையில்  மூன்று மீட்டர் நீளமுள்ள முதலை இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்.

இரவு 9:20 மணியளவில் தனது குழந்தைகளில் ஒருவர் பூனைக்கு உணவளிக்க சமையலறைக்குச் சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக வீட்டின் உரிமையாளர் சுஹைலி பை, 52, கூறினார்.

சமையலறைக்கு வந்ததும், என் பிள்ளை அடியில் ஒரு கருப்புப் பொருள் நகர்வதைக் கண்டு திடுக்கிட்ட பின், அது ஒரு முதலை என்பது உறுதியானது.

பிறகு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இத்தகவலைத் தெரிவித்தார். சரிக்கே தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத்  தலைவர் மஹ்முதீன் நருடினைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.

ஒன்பது பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்று முதலையைப் பிடிக்க முயன்றனர். இருப்பினும் அது அருகிலுள்ள ஆற்றில் இறங்கி தப்பித்து ஓடியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker