Latestமலேசியா

‘காட்’ விவகாரம் ; அனைத்து இனங்களின் உணர்வுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும் !

கோலாலம்பூர் ஆக.6- தமிழ், சீனப் பள்ளிகளில் ‘காட்’ எனும் அரபு ஓவிய எழுத்தைக் மலாய் மொழி பாடத்திட்டத்தில்  அறிமுகம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆட்சேபம் தெரிவிக்கிறது என்று சங்கத் தலைவர் இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த கல்வியாண்டிலிருந்து நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய மொழிப்பாடத்தில் அரபு ஓவிய எழுத்தைப் பயில்வதை ஒரு பகுதியாக இணைத்துள்ள கல்வி அமைச்சின் முடிவு ஏற்புடையது அல்ல.

தமிழ், சீனப் பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தைக அறிமுகம் செய்வது குறித்து சமூகத்தில் நிலவும் ஐயப்பாடு, எதிர்மறையான கருத்துகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

கடந்த 2016 ஆம் ஆண்டு  ஜூன் 28 ஆம் தேதி போஸ் மலேசியா நிறுவனம் அப்துல் பாக்கி அபு பாக்கார் வரைந்த அரபு ஓவிய எழுத்து, டாக்டர் வோங் கொங் பெங் வரைந்த சீன ஓவிய  எழுத்து, டாக்டர் வேலு பெருமாள் வரைந்த தமிழ் ஓவிய எழுத்துக்களைக் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு ஓவிய எழுத்துக்குப் புதியதோர் அறிமுகத்தை உருவாக்கியது.

எனவே ஓவிய எழுத்துகளை போதிப்பது வரவேற்கத்தக்க முடிவுதான் என்றபோதிலும் தேசியப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தையும் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் ஓவிய எழுத்துக்களையும் சீனப்பள்ளிகளின் சீன ஓவிய எழுத்துகளையும் போதிக்கும் வகையில் அந்த முடிவு அமைய வேண்டும். அதன் வழி ஓவிய எழுத்தும் மொழி உரிமையும் வாழும் என்றும் எழுத்தாளர் சங்கம் வலியுறுத்துகிறது என ராஜேந்திரன் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker