Latestமலேசியா

யுபிஎஸ்ஆர் தேர்வு ரத்து ? முதலில் விரிவான ஆய்வு தேவை ! 

ஷா ஆலம், ஆக.6- ஆரம்பப்பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்ஆர் தேர்வினை ரத்து செய்யும்  திட்டம் குறித்து அரசாங்கம் முன்னதாக முழுமயான ஆய்வு நடத்த வேண்டும் என யுபிஎம் பல்கலைக்கழகத்தின் கல்வி ஆய்வு பிரிவு பேராசிரியர்  மட்யா டாக்டர் வான் மர்ஸுக்கி கருத்துரைத்துள்ளார்.

தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் கல்வி முறையை மாற்றுவதற்கும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கும் அத்தேர்வு  ரத்து செய்யப்பட வேண்டும் என என்.யு.டி.பி எனப்படும்  தேசிய ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்ததற்கு பதில் தரும் வகையில் அவர் அக்கருத்தினை முன் வைத்தார்.

ஆரம்பப்பள்ளியில் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா  அடைநிலைகளை மதிப்பிடுவதற்கு இந்த தேர்வு மிக முக்கியமானது.  இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கல்வி அறிவு, சிந்திக்கும் ஆற்றல் போன்ற அம்சங்களில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அத்தேர்வு தொடர வேண்டும் .

இதற்கிடைய வருங்காலத்தில் யுபிஎஸ்ஆர் தேர்விற்கு பதிலாக அறிமுகப்படுத்தக்கூடும் வேறு தேர்வினை நம் தற்பொழுது தெரிந்திருக்க முடியாது. ஆனாலும் ஒரு வேளை மாற்றம் நடைபெற்றால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேர்வு தற்போதையதை காட்டிலும் சிறந்ததாக இருத்தல் அவசியம்.

எனவே இவ்விவகாரத்தில் நன்மைகள், பலவீனங்கள் அனைத்தையும் கண்டறிந்து நிலையான முடிவெடுக்க விரிவான ஆய்வு தேவை எனவும் பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker