Latestமலேசியா

வட்டி முதலையின் அராஜகம்: நபர் குடும்பத்தோடு கோலாலம்பூருக்கு ஓட்டம்

கோலாலம்பூர், ஆக. 6 – தாம் வாங்கியிருந்த பணத்தை வட்டி முதலையிடம் செலுத்தத் தவறியதால், தமது புகைப்படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரப் படுத்தியதில், அச்சமடைந்த நபர் தமது குடும்பத்தாருடன் கோலாலம்பூருக்கு ஓடி வேண்டி நிலை வந்துள்ளது.

37 வயதான கைருல் செய்தியாளர்களிடம் பேசும்போது, தாம் திரெங்கானு சென்டரிங் கிராமத்திலிருந்து கடன் முதலைக்குப் பயந்து ஓட வேண்டியதாகத் தெரிவித்தார்.

தாம் 19,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டுமென அச்சுறுத்தி, தமது படத்தை போஸ்டரில் போட்டு, பணத்தை வாங்கி, பணத்தை செலுத்த வேண்டுமென்ற வாசகத்தை அதில் அச்சிட்டு, பேருந்து நிலையம், பள்ளிவாசல் முதலியவற்றில் ஒட்டி தம்மை கேவலப் படுத்தியதாகத் தெரிவித்தார்,

நிலைமை இப்படி இருக்கும்போது, கைருல் நடத்தி வந்த உணவுக் கடையில் கிராமத்தினர் வருவது குறைந்து பெருத்த நட்டம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் தமது குடும்பத்தாருடனான தொடர்பை நிறுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவுக் கடையைத் திறக்க வட்டி முதலையிடம் தாம் 1,200 ரிங்கிட்டை மட்டுமே வாங்கி, 7,000 ரிங்கிட் வரை செலுத்தியிருந்தாலும் தமது கடன் 19,000 ரிங்கிட் என அதிகரித்ததாகவும் தமது குடும்பத்தாரின் பாதுகாப்பில் அச்சம் கொண்டதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கைருல் தெரிவித்தார்.

மேலும், தமது இரண்டு மகள்களின் பாதுகாப்பினைக் கருதி, பல்கலைகழகப் படிப்பையும் நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

கடனைச் செலுத்தாதவர்களைப் பற்றி போஸ்டர்களை ஒட்டுவது அச்சுறுத்தும் செயல், கொடூரமானது என அந்தக் கழகத்தில் தலைவர் டத்தோ நாட்சிம் ஜோஹான் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker