Latestமலேசியா

விமானப் பயணியிடமிருந்து மான் கொம்புகள் பறிமுதல்

மிரி, ஆக. 6 – அரிய வகை மான் கொம்புகளைக் கடத்த முயன்றவர்களை சிபு விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

சரவாக் வனவிலங்குக் கழகத்தின் (எஸ்.எஃப்.சி) தலைமை நிர்வாக அதிகாரி சோல்கிப்லி முகமட் அத்தான்,  ஜூலை 30 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ​​அதன் அதிகாரிகளும் சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகத் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து சிபுவிற்கு செல்லும் பயணிகளின் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் கொம்புகளை அவர்கள் கைப்பற்றினர்.

பொருள்களை ‘எக்ஸ்ரே’ பரிசோதனை செய்ததில்  அந்த வனவிலங்குகளின் உடலுறுப்புப் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். எஸ்.எஃப்.சி இந்த வழக்கை மேலும் விசாரித்து வருகிறது.

வனவிலங்குகளுக்கு எதிரான இத்தகைய குற்றத்தை சம்மந்தப்பட்ட தரப்பினர் காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு சோல்கிப்லி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker