Latestமலேசியா

காண்டாமிருக பாதுகாப்பு திட்டம் ; சபா குழு இந்தோ. பயணம் !

கோத்தா கினபாலு, ஆக.7- காண்டாமிருக பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்க என் தலைமையிலான குழு நாளை இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது என சபா மாநில துணை முதல்வர் டத்தோ கிறிஸ்டினா லியு தெரிவித்தார்.

தற்பொழுது நட்டில் ஒரே ஒரு சுமத்திரா வகை காண்டாமிருகம் மட்டுமே உள்ளது. நோய் வாய்ப்பட்டதால் அந்த பெண் காண்டாமிருகத்தால் குட்டி ஈன்றெடுக்க முடியவில்லை. அதே சமயம் தற்பொழுது இந்தோனேசியாவில் சுமார் 50 சுமத்திரா காண்டா மிருகங்கள் உள்ளன.

எனவே இந்த வகை மிருகத்தை இன பெருக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு தரப்பினரிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்.

இந்த குழுவில் சபா வனவிலங்குத் துறை, அரசு சாரா இயக்கங்களான போர்னியோ ரைனோ அலையன்ஸ்,உலக வனவிலங்கு நிதியகம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர் என மாநில அவை அமர்வு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker