Latestமலேசியா

தீ விபத்தில் 86 வயது முதியவர் மரணம் !

கோத்தா கினபாலு, ஆக.7-  இங்குள்ள கம்போங் லெம்பிசிங் எனும் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக அழைந்த நிலையில் 86 வயது முதியவர் மரணமுற்றார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அத்தீவிபத்து நிகழ்ந்தது. அச்சம்பவத்தில் அழிந்த வீடொன்றின் சமைலறை பகுதியில் ஜும்மி எனும் அந்த முதியவரின் சடலம் தீயணைப்பு வீரர்களால் கண்டெடுக்கப்பட்டது.

தீ விபத்து சமயத்தில் அந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

அவரின் சடலம் சமையலறையிலிருந்து வெளியேரும் கதவு அருகே கிடந்தது. விபத்து நேரத்தில் அவர் தப்பிக்க முயற்சித்திருக்க கூடும் என சபா மாநில தீயணைப்பு & மீட்பு படையின் நடவடிக்கை  பிரிவு துணை இயக்குனர் மிஸ்ரான் பிசாரா தெரிவித்தார்.

இதனிடையே மாலை 4.30 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker