Latestமலேசியா

சிலாங்கூரின் முஸ்லிம் அல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்

ஷா ஆலம், ஆக. 8 – சிலாங்கூர் சட்டமன்றத்தின் முஸ்லிம் அல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை 11 மணியளவில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்தனர்.

அதில் ஜசெகவின் தெங் சாங் கிம், வி.கணபதி ராவ், இங் சி ஹான் மற்றும் பிகே ஆரின் ஹீ லொய் சீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் சிறார் மதம் மாற்றம் சம்பந்தமாக விவாதிக்கவே அந்தச் சந்திப்பு நடந்ததாகவும் அக்கூட்டத்தை அவர்கள் ஜூலை 25 இல் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிகிறது.

ஜுலை 26இல் அந்தச் சட்டத் திருத்தம் சம்பந்தமாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்ததாகவும், அதனை சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் பரிந்துரைத்து சுல்தான் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமிருடின் சுல்தானுடன் பேசும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

கணபதி ராவ் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker