Latestமலேசியா

மரத்தில் மோதிய கார் : நைஜீரிய ஆடவர் பலி !

சைபர்ஜெயா, ஆக. 8 – நைஜீரிய ஆடவர் ஓட்டிவந்த கார் மரத்தில் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம்  இன்று  சைபர்ஜெயா மலாய் பள்ளியின் அருகில் நிகழ்ந்துள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு,மீட்பு செயற்குழுவின் தலைவர் ஸுல்ஃபிகார் ஜாஃபார் குறிப்பிடுகையில், இன்று காலை 6 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்து  7 பேர் கொண்ட குழு அங்கு விரைந்ததாகத் தெரிவித்தார்.

முஹமத் சாத் யுகுடா(வயது 27 ) எனும் நைஜீரியா ஆடவர் ஓட்டிவந்த ‘ஹோண்டா சிவிக்’ ரக கார் மரத்தில் மோதியதாக அவர்  தெரிவித்தார்.

காரிலிருந்து மீட்கப்பட்ட அந்த ஆடவர் இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த ஆடவரின் உடல் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker