Latestமலேசியா

சாமுவேல் ஆசிரியரின் அர்ப்பணிப்பு- பூர்வகுடி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றது

பெக்கான், ஆக. 9 – தங்களுக்கு ஆங்கில மொழிப் பாடத்தை அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கிய ஆசிரியர் சாமுவேல் ஏசையாவின்(வயது 32) சேவையை இழப்பதில் ருஞ்சாங் பூர்வகுடி தேசிய பள்ளியின் மாணவர்கள் பெரிதும் வருத்தத்துக்கு உள்ளாகினர்.

பூர்வகுடி மாணவர்கள் பெரும்பாலோர் கண்ணீரோடு அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

வெளிநாடில் இருக்கும்போது மாணவர்களுடன் நிச்சயமாகத் தொடர்பு கொள்வதாக அவர் உறுதி கூறினாலும், அவர்களின் துயரத்துக்கு அளவே இல்லை.

ஆசிரியர் சாமுவேல் ஆங்கில மொழியைக் கலை நுணுக்கத்தோடு அந்த மாணவர்களுக்குப் போதித்ததால் அவர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.

பள்ளி மாணவர்களின் பெற்றோரும் அங்கு வந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

சாமுவேல் ஒவ்வொரு நாளும் குவாந்தானில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரம் பயண செய்து ருஞ்சாங் பூர்வ குடி வீடமைப்புப் பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆங்கில மொழியைப் போதித்து வந்துள்ளார். அவரின் அயராத உழைப்பினால் அந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதோடு, யுபிஎஸ்ஆர் தேர்விலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றனர்.

ஆங்கில மொழியில் அவர்களின் தேர்ச்சி விகிதம் 30 லிருந்து 80 விழுக்காடு அரை அதிகரித்துள்ளது.

தமது கண்ணீரை அடக்க முடியாத சாமுவேல், தாம் அங்கு ஆசிரியர் பணியில் பலவற்றைக் கற்றுக் கொண்டதாகவும் அவகளின் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டதாக வும் தெரிவித்தார்.

அங்குள்ள மாணவர்களும் பெற்றோரும் அவரை ‘சார்’ என்றே அழைத்தனர். மாணவர்களைத் தமது சொந்த குடும்பத்தினர் போலவே அவர் கருதி நடந்து கொண்டுள்ளார்.

சாமுவேல் புல்பிரைட் உபகாரச் சம்பளத்தில் அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் 3 ஆண்டு முதுகலை பயில செல்வதால், அவர் பிரியாவிடையைப் பெற அவர் வந்துள்ளார்.

பள்ளியில் பாடம் நடத்துவதோடு சாமுவேல் அவர்களின் வீடுகளுக்கும் சென்று மரத்தடியின் கீழ் பாடங்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்கது. அவரிடம் படித்து இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரும் முன்னாள் மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் எழுந்தால் அவரிடமே கேட்டுத் தெளிவும் பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker