Latestமலேசியா

மின் கம்பத்தில் மோதி,  ஆடவர் பலி! 

குவாந்தான், ஆக. 9 –  கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆடவர் மரணமடைந்தார்.

இச்சம்பவம் நேற்றிரவு ஜாலான்  செமாம்பு எனுமிடத்தில் விடியற்காலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

சான் சாய் கென்(வயது 41  ) என அடையாளம் காணப்பட்ட அந்நபர்,     சம்பவ இடத்திலேயே மரணமுற்றார். அந்நபர் ஓட்டிவந்த “மாஸ்டா” ரக கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த மின் கம்பத்தில்  மோதியதாக தெரிவிக்கப்பட்டது.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக மாநில டிராபிக் போக்குவரத்து ஆணையர் கமருலசமான் ஜூஸோ குறிப்பிட்டார்.

அவரது உடல்,  பிரதேப் பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் அஃபான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், இவ்வழக்கு போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41 /1 இன் கீழ் விசாரிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker