Latestமலேசியா

நஜிப்பை கொலை செய்ய முயற்சியா? விந்தை – முகைதீன்

மூவார், ஆக. 10 – 2017ஆம் ஆண்டு பெக்கானில் தம்மைக் கொல்ல சதி நடந்ததாகச் சொல்லிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கூற்று வேடிக்கையாக இருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செயல் நடந்த 2017ஆம் ஆண்டில் அதைச் சொல்லாமல் இப்போது சொல்வதன் நோக்கம்தான் என்னவென அவர் கேள்வி எழுப்பினார்.

பிரமராக இருந்த நஜிப் ரசாக் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போது உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான அகமட் ஸாஹிட் ஹமிடி என்ன செய்து கொண்டிருந்தார்? அது பயங்கரமான செயல். எனவே கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புலனாய்வு செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அப்போது ஆட்சியை நடத்தியது பக்காத்தான் ஹராப்பான் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாகத்தான் இருந்தோம். அவர்கள்தான் ஆட்சியை நடத்தினார்கள்.

நேறறு முன்தினம் அம்னோ தலைமையகத்தில் முக்கியமான உண்மை, பணமே அரசன் எனும் கருத்தரங்கில் பேசிய நஜிப் ரசாக், அடையாளம் தெரியாத நபர் தமது வீட்டை துப்பாக்கியால் சுட்டதாகவும் அப்போது தாம் வீட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது உண்மையென்று வெள்ளிக்கிழமை முகநூலிலும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைச்சு அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்றும் அது பற்றி புலனாய்வு செய்யப்படும் எனவும் முகைதீன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker