Latestவாழ்க்கை

வெட்டப்பட்ட மரங்களுக்கு கதறி அழுத சிறுமி: பசுமை தூதராக நியமனம்! 

புதுடில்லி, ஆக. 10 வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சேர்ந்த 9 வயது சிறுமி ஆசையாக வளர்த்து வந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டது கண்டு கதறி அழுதார். அம்மாநில முதல்வர் அந்த சிறுமியை பசுமை தூதராக அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது .இம்மாநிலத்தில் உள்ள கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார் சாயா தம்பதிகளின் மகள் வாலண்டினா வயது 9 .ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள்.

இவருக்கு இயற்கை மீது அதிக ஆர்வம். இதனால் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே தன் வீட்டருகே ஆற்றங்கரையில் இரண்டு மரங்கள் மரக்கன்றுகளை நட்டு தினமும் நீர் ஊற்றி ஆசையாக வளர்த்து வந்தார். 5 ஆண்டுகளில் அந்த செடிகள் பெரிய மரங்களாக வளர்ந்தன.

இந்நிலையில் ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணி சமீபத்தில் நடந்தது. அப்போதெல்லாம் வாலண்டினா வளர்த்த இரண்டு குல்மொஹார் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இதை கண்டு கதறி அழுதார். சுற்றி இருந்தவர்கள் அவரை தேற்றினர் .ஆனால் சிறுமியை யாராலும் சமாதானப் படுத்த முடியவில்லை.

இந்த காட்சியை வாலண்டினா உறவினர் ஒருவர் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இயற்கை மீது சிறுமி கொண்டிருந்த காதலை கண்டு பலரும் உணர்ச்சிவசப்பட்டனர். அந்த காட்சிகளை பார்த்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மரங்கள் மீது சிறுமி வைத்திருந்த அன்பை கண்டு நெகிழ்ந்தார். மணிப்பூர் மாநில அரசின் பசுமை திட்டத்துக்காக அவரை பசுமை தூதராக முதல்வர் உத்தரவிட்டார் .அந்த ஆற்றங்கரையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 மரக்கன்றுகள் வைக்க வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker