Latestஇந்தியா

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரவில் வெள்ளம் – 147 பேர் மரணம் 

பெங்களூர், ஆக.12 –  இந்தியாவின் மேற்கு மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா  ஆகிய மாநிலங்களில் பெய்த  கனத்த மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் இதுவரை 147 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகளுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், சில வீடுகள் 3.6 மீட்டர் ஆழம் வரை  மூழ்கியுள்ள வேளை மீட்பு நடவடிக்கையை வேறு விதமாக கையாண்டு வரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
கேராளாவில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவின் வரலாற்று இடமான  அம்பி மாவட்டத்திலும் வெள்ளம் சூழ்ந்து  60 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker