Latestஇந்தியா

இந்திய நாடாளுமன்றத்தில் சமயம் மாறுவதை தடுக்கும் சட்ட மசோதா தாக்கல் ?

இந்தியா,ஆகஸ்ட் 12 – அடுத்த இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சமயம் மாறுவதை தடுக்கும் சட்ட மசோதாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்யும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த சமயத்தவரும்  பிற சமயத்துக்கு மாறுவதை தடுக்க வகை செய்யும் இச்சட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  JAMMU –KASHMIR-க்கு 370 அரசியல் அமைப்பு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு சுயாட்சி அதிகாரம் மீட்டுக் கொள்ளப்பட்டு அது UNION பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அதே சமயத்தில் முஸ்லீம் பெண்கள் மூன்று முறை TALAK அடிப்படையில் விவாகாரத்து செய்யப்படுவது சட்டவிரோதம் என முடிவெடுக்கப்பட்ட நிலையில்  அடுத்து சமயம் மாறுவதை தடுக்கும் சட்டமும் அமலுக்கு வர வாய்ய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker