Latestமலேசியா

செத்தியா ஆலமில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி

ஷா ஆலம், ஆக. 12 – செத்தியா ஆலமில் இரண்டு ரொக்கம் பெறும் இயந்திரங்கள், ஒரு பணப் பட்டுவாடா இயந்திரத்தையும் உடைக்க முயற்சி தோல்வியில் முடிந்தது.

தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்குப் போலீசார் காலை 8.10க்கு விரைந்தனர். ஜாலான் செத்தியா பிரிமா ஆர் யு13/ஆர் எனும் இடத்தின் 3 இயந்திரங்கள் உடைக்கப்பட்டு, சங்கிலியால் இழுக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டன.

திருடர்கள் ரொக்கம் இருந்த பெட்டியை உடைக்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்,

சிசிடிவியின் பதிவை ஆராய்ந்தபோது, ஒரு ஜேக்கட் அணிந்த திருடன் காலை 6.43 மணியளவில் அந்த இயந்திரங்களை உடைக்க முயன்று ள்ளான். மற்றொருவன் சங்கிலியால் இயந்திரங்களைக் கட்டி இழுக்க முயன்றது தெரிகிறது.

தங்களின் முயற்சி பலனளிக்காததால் அவ்விருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சிசிடிவி வெளியே பதிவு செய்ய முடியாததால், அவர்களின் வாகனத்தை அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சம்பவம் இரண்டே நிமிடங்களில் முடைவடைந்துள்ளது.

இது பற்றி விவரம் தெரிந்தோர் இன்ஸ்பெக்டர் ரவிந்த் சுப்ரமணியத்துடன் (012-26332030) தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker