Latestஇந்தியா

பாட புத்தகத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த் விவகாரம்:- நீக்கக் கோரி வழக்கு!

சென்னை,ஆக.12- ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் விவரங்களை அகற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மற்றும்  புகையிலை எதிர்ப்பு மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் சாதனையாளர்கள் குறித்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டோரின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாககவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘ரேக்ஸ் டு ரிச்சஸ் ஸ்டோரிஸ்’  என்ற பாடத்தில் பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமில்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாக ரஜினிகாந்த் திகழ்கிறார் என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் புகைபிடிப்பதை ஊக்குவித்து இருப்பதால் மாணவர்களும் அதை பின்பற்ற நேரிடக் கூடும் என தமிழ்நாடு புகையிலை தடுப்பதற்கு மக்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது இதனால் தங்கள் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker