Latestஉலகம்

பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் கிராமம்! ஆண் குழந்தைக்காக ஏங்கும் மக்கள்!

மீஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி,ஆக.12- போலந்து நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறக்காததால் காரணம் தெரியாமல் மக்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். போலந்து நாட்டில் நடைபெற்ற ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியின்போது சிறிய கிராமமான மீஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்திலிருந்து பெண்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர் .

முதலில் இதனை சாதாரணமாக நினைத்த போட்டியாளர்கள் அதன் பின்னரே அந்த கிராமத்திற்கான விசித்திரத்தை புரிந்துள்ளனர் .கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை .மாறாத பெண் குழந்தைகள் மட்டும் பிறந்துள்ளன. இதனால் அவர்கள் மட்டும் அனைத்து துறைகளும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அந்த கிராமத்து மக்கள் திகைத்துப் போயுள்ளனர் .

இது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வதற்கு மருத்துவர்களுக்கும் மேயர் அனுமதி கொடுத்துள்ளார் .இந்நிலையில் இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்தேன் .ஆனால் இரண்டு பேருமே பெண் குழந்தைகள். என் பக்கத்து வீட்டை சேர்ந்த நபருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்த போது அவருக்கும் பெண் குழந்தைகள் தான் பிறந்தன .அடுத்ததாக ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஒரு சிறப்பு வாய்ந்த பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker