உலகம்

வாக்குவாதம்:- எகிறி குதித்த கணவர்! கண் கலங்கிய மனைவி!

வேலூர்,ஆக.12- வேலூரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கணவன் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கனியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் வயது 32 இவர் கடந்த ஜூன் மாதம் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகேஷ்குமாருக்கு புவனேஸ்வரிக்கும் திருமணமான நாளிலிருந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந் நிலையில் இருவரும் ஒன்றாக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார்  மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென்று கீழே குதித்துள்ளார் கணவன் தன்கண்முன்னே கீழே குதித்ததைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி மேம்பாலத்தின் கீழே இறங்கிச் சென்று பார்த்ததில் மகேஷ்குமார் சம்பவ இடத்திலே இறந்துள்ளார். தன் கண்முன்னே கணவன் இறந்ததை   பார்த்து மனைவி கதறி அழுதார்.

குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் ‘இருவரும் உயிரோடு இருக்க வேண்டாம். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு புவனேஷ்வரியை அழைத்து சென்றார். ஆனால் அங்கு செல்ல புவனேஷ்வரி மறுத்து கணவரை சமாதானப்படுத்தி சத்துவாச்சாரி நோக்கி அழைத்து வந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே வந்த போது மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மகேஷ்குமார் கூறி உள்ளார். அதனை புவனேஷ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்’ என புவனேஷ்வரி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

திருமணமான ஒரே மாதத்தில் மனைவி கண்முன்னே மேம்பாலத்தில் இருந்து ராணுவவீரர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளதுஇதனை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker