Latestமலேசியா

அம்புகள் எய்த நிலையில் இறந்து கிடந்த நாய்

கோலாலம்பூர், ஆக. 13 – நாயொன்று உடலில் இரு அம்புகள் குத்தப்பட்டு இறந்து கிடந்த வீடியோ பதிவு வைரலாகப் பகிரபட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த அராஜக நிகழ்ச்சி லங்காவி தீவில், பெக்கான் குவா எனும் இடத்தில் நடந்ததாக மலேசிய விலங்குக் கழகத்தின் தலைவர் ஆரி டுவி அன்டிக்கா உறுதிப் படுத்தினார்.

அனாமதேயமாகச் சுற்றித் திரியும் நாய்களை ஒழிப்பதற்கு இது சரியான முறையல்ல. அதிகாரம் வழங்கப்பட்ட மிருக நலன் வாரியமே அவற்றைக் கொல்ல முடியும். நோயுற்ற நாயைக் கொல்வதானாலும் அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படாத மிருகங்களை அதற்கான பராமரிப்பு இடங்களில் விட்டு விட வேண்டும். இம்மாதிரியான முறையில் அராஜகமாக நடந்து கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது பற்றிய விவரம் தெரிந்தோருக்குத் தாம் 1,000 ரிங்கிட் சன்மானம் வழங்கவும் முன் வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விவரம் தெரிந்தோர் வாட்சப் எண். 011-20901097 க்குத் தெரிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker