Latestமலேசியா

இந்தியர்களின் விசுவாசம் கேள்விக்குரியதா? புகார் செய்யப்படும் – இந்து ஆகம அணி

கோலாலம்பூர், ஆக. 13 – மலேசிய இந்தியர்களின் விசுவாசத்தின் மீது கேள்வி எழுப்பிய ஸாக்கிர் நாயக்கின் மீது போலீஸ் புகார் அளிக்கப்படும் என ஆகம அணியின் ஆலோசகர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

சட்டத்துக்குப் பயந்து இங்கு ஒளிந்து கொண்டிருக்கும் ஸாக்கிர் வரம்பு மீறுவதாகவும் அவர் சமயத்தைப் பற் றி பிரசாரம் செய்யாமல் இன உணர்வைத் தூண்டி இந்தியர்களின் விசுவாசத்தின் மீது கேள்வி எழுப்புவதற்கு என்ன உரிமை உள்ளது என அருண் கேள்வி எழுப்பினார்.

கிளந்தானில் சமய உரை நிகழ்த்தும்போது, மலேசிய இந்தியர்கள் மகாதீருக்கு விசுவாசமாக இருக்காமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசுவாசம் காட்டுவதாகக் குறிப்பிட்டு இங்கு இனவாதத்தைப் பரப்ப முயல்வதாக அருண் குற்றம் சாட்டினார்.

அவர் திட்டமிட்டே இன துவேஷத்தை உருவாக்குகிறார். அவரின் நோக்கம் மதத்தைப் பரப்புவது அல்ல, மாறாக இன பாகுபாட்டை உருவாக்குவதேயாகும்.

நாங்கள் மலேசியர்கள். வசிக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறோம். அதனை கேள்வி எழுப்பி குளிர் காய வேண்டாமென அருண் துரைசாமி அறிவுறுத்தினார். எனவே, அவர் மீது போலீஸ் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான், ஸாக்கிர் மத பதற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்தியர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்புவதற்கு இவர் யார்? இங்கு மத பிரசாரத்தை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர அனுதாபம் தேட இந்தியர்களின் மீது சந்தேகத்தை விதைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி கூறும்போது, ஸாக்கிர்தான் சொந்த நாட்டுக்கு விசுவாசத்தைக் காட்டாமல் இருப்பதாகவும் இந்தியாவினால் தேடப்படும் ஸாக்கிர், இங்கு ஓடி வந்து அடைகலம் தேடியிருக்கும் வேளையில், இனவாதம் பேசி இனங்களுக்கிடையே பிரச்சினையை உருவக்கக்கூடாது.

ஜசெகவின் உறுப்பினரான சதீஸ், இனவாததைத் தூண்டும் வகையில் பேசும் ஸாக்கிரின் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

மற்ற மதங்களை விமர்சித்து பிரச்சினையை உருவாக்கி வரும் ஸாக்கிரை தற்காப்பதற்காக நாட்டின் பாதுகாப்பை பலிகடா ஆக்க வேண்டாமென அவர் என அரசைக் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker