Latestவாழ்க்கை

இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்

 தூத்துக்குடி,ஆக.13-வறுமையின் கொடுமையால் பெற்ற தாயின் உடலை தகனம் செய்யாமல் அவரது மகனே உடலை குப்பையில் வீசிய சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    அந்த குப்பைத் தொட்டியில் சேர்ந்த கழிவுகளை சேகரிக்க துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை சுத்தம் செய்ய அங்கு வந்தனர் அங்கே பிணம் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் போலீஸ் க்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக கிடந்த அந்தப் பெண்ணின் பெயர் வசந்தி வயது 50. அவருடைய கணவர் நாராயணசாமி இவர்களுக்கு முத்துலட்சுமணன் வயது 29 என்ற மகன் உள்ளார். வறுமையின் காரணமாக வசந்தி நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இவரது மகன் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வசந்தி இரவு உயிரிழந்தார் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் முத்து லட்சுமணன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற மனதை கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்

தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தாயின் உடலை  வீசினால் அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என நினைத்து சடலத்தை குப்பையில் வீசியதாக
போலீஸ் விசாரணையில் தெரியவந்தது .

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வசந்தி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்   அவவட்டாரத்தை சேர்ந்தவர்கள் உடன் இறுதிச்சடங்கு நடந்தது,

8 mins
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker