Latestமலேசியா

உள்நாட்டு அரசியலில் ஸாக்கிரின் தலையீடு; அமைச்சரவை விவாதிக்க வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – ஜாகிர் நாயக் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது குறித்து அமைச்சரவை விவாதிக்க வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் சுதந்திரமாக தனது பிரச்சாரங்களை செய்ய பிரதமர் மகாதீர் வகை செய்துவிட்டார். இது பாஸ் போன்ற எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் இன ஒற்றுமையை சீர்குலைக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என சந்தியாகோ கடுமையாக சாடியுள்ளார்.

நாளை நடைப்பெறும் அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியமானது. ஸாக்கிர் நாய்க்கை பற்றி விவாதிப்பது மக்களின் நலனையும் நாட்டின் பாதுகாப்பையும் உட்படுத்தியது. ஸாக்கிர் நாய்க்கின் பிரச்சாரங்கள் பல்லின மக்களிடையே இன வெறுப்பையும் உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைகின்றது.

முன்னதாக கோத்தா பாருவில் நடத்தப்பட்ட ஸாக்கிர் நாய்க்கின் பிரச்சாரத்தில், ஸாக்கிர் நாய்க்  மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.  மலேசிய இந்துக்கள் இந்தியாவின் முஸ்லிம்களை விட 100 மடங்கு கூடுதல் உரிமை பெற்றுள்ளதாகவும் ஸாக்கிர் கூறியிருக்கிறார்.

மேலும் அந்த பிரச்சார நிகழ்வின்போது, போலீஸ் படையினரின் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டது ஸாக்கிர் கடவுள் போல போற்றப்படுவதாக அமைந்தது என சார்ல்ஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker