Latest

ஐரிஸ் பெண்ணைத் தேட – வெளிநாட்டினர் உதவி

நீலாய், ஆக. 13 – ஆகஸ்டு 4ஆம் தேதியில் இருந்து காணாமல் போன பிரான்ஸ்-ஐரிஸ் பெண்ணைத் தேட இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து போலீசார் உதவுவதாக நெகிரி செம்பிலான் போலீஸ் துணைத் தலைவர் சே ஸாக்காரியா ஓஸ்மான் தெரிவித்தார்.

அவர்கள் கடந்த வாரம் இங்கு வந்ததாகவும் தற்போது 353 பேர் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டினர் புலனாய்வில் மட்டுமே உதவுவதாகவும் அவர்கள் தேடி மீட்கும் பணியில் ஈடுபடவில்லை.

நோராவைத் தேடி மீட்கும் பணி தற்போது பெரெம்புன் மலையை மட்டுமே வைத்து மேற்கொள்வதாகவும் அது 12 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டிருப்பதாகவும் அதில் 176 பேர் ஈடுபட்டிருக்கின்றனர்.

தற்போது 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கவனம் செலுத்தப்படுதாகவும், கடந்த 3 நாள்களில் சீதோஸ்ணம் சீராக இல்லாத காரணத்தினால், தேடும் குழு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker