Latestசினிமா

கடுமையாகத் திட்டி தீர்த்த ரசிகர்கள்;- மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

சென்னை,ஆக.13- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் நண்பனாக நடித்தவர் மம்முட்டி. நட்புக்கு அடையாளமாக இருக்கும் இப்படத்தின் காட்டுகுயிலு பாடல் திகழ்ந்து வருகிறது. மலையாள சினிமாவின் பிரபல நடிகரான மம்முட்டி பல ஹிட் படங்களில் நடித்தவர் .அவர் நடிப்பில் வெளியான பேரன்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில் தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டது. ஆனால் கிடைக்காததால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார்.

இதனால் விருதுகள் தேர்வு நடுவர் குழு தலைவர் ராகுல் ரவைல் பேஸ்புக் பக்கத்திற்குச் சென்று அவரை கடுமையாக திட்டி தீர்த்தனர்.

இதனால் அவர் மம்முட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்கள் ரசிகர்களின் அவதூறுகளை எதிர்கொண்டு வருகிறேன்.பேரன்புக்கு விருது தரவில்லை என விமர்சிக்கிறார்கள்.

நடுவர் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது உங்கள் படத்தை உள்ளூர் குழு நிராகரித்துவிட்டது. மத்திய குழுவுக்கு அந்த படம் வரவில்லை உங்கள் ரசிகர்களை கட்டுப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் .அதற்கு மம்மூட்டி எனக்கு எதுவும் தெரியாது நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker