Latestமலேசியா

கடை வீட்டில் தீ: பெண்கள் இருவர் மரணம்- சதி காரணமா?

ஜோகூர் பாரு, ஆக. 13 – கடை வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு பெண்கள் மரணமடைந்த வேளையில், அது சதியில் ஏற்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.

சிசிடிவி பதிவில் இரு நபர்கள் பிளாஸ்டிக் போத்தலில் ஒரு வித திரவத்தைக் கொண்டுவருவது காணப்படுவதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

தீக்கிரையான அந்த இரட்டை மாடி கடை வீட்டில் வீட்டுச் சாயம் விற்கப்பட்டு வந்துள்ளதாகவும் அந்தக் கடை வீடு 2013இல் இருந்து வாடகைக்கு எடுக்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வீட்டின் பின்னால் இருக்கும் கதவின் வழியாக தீ மூண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு திரவ நாற்றத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

மரணமடைந்தவர்களில் ஒருவர் 60 வயது நிரம்பியவர் என்றும் மற்றவர் 20 வயது உறவினராவார். அந்த வீட்டில் 5 பேர் குடியிருந்ததாக நம்பப்படுகிறது.

மற்ற குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்படுவதாவும் அதில் சதி நாச வேலை நடந்துள்ளதா என்பது துல்லியமாக ஆய்வு செய்யப்படும் என சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker