Latestமலேசியா

காட் விவகாரத்தில் டோங் ஸோங் இனவாதமாகச் செயல்படுகிறது – துன் மகாதீர் குற்றச்சாட்டு

லங்காவி, ஆக. 13 – அரசு, பள்ளிகளில் கொண்டுவரும் மாற்றங்களை டோங் ஸோங் எனும் சீன கல்வி அமைப்பானது எதிர்த்தே வருவதாகவும் ஜாவி-அரேபிய சித்திர எழுத்துப் பாடத்தில் அது இனவாதத்தைக் கிளப்பி வருவதாகத் துன் மகாதீர் குற்றம் சாட்டினார்.

லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு அனைத்துப் பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வவாசான் பள்ளித் திட்டத்தை அது கடுமையாக எதிர்த்ததாகவும் சீனப் பிள்ளைகள் மலாய்க்காரப் பிள்ளைகளுடன் சேர்வதை அது விரும்பவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர்கள் மலாய்க்காரர்களை விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் அவர்கள் எதிர்ப்பையே தெரிவிக்கின்றனர். எதற்கும் இணங்கிப் போவதில்லை.

காட் எனும் பாடத்தை தேசிய முன்னணி ஆட்சி 2012இல் அங்கீகரித்தது. ஆனால், டோங் ஸோங் அப்போது எதிர்க்காமல், இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

காட் பாடத்தைப் போதிப்பது தாய் மொழிப் பள்ளிகளில் இஸ்லாத்தை பரப்பவுதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என பாடாங் மாட் சிராட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் குறிப்பிட்டார்.

தம்முடைய முடிவுகளுக்கு இனி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோவிடம் கேட்கப் போவதாகவும் அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கேட்பதால், அவர் பிரதமர் தரத்துக்கு உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், காட் விவகாரம் பற்றி பேசிய சார்லஸ், மகாதீருக்கு அதிக வலு இருப்பதாகவும் ஆனால், அடிக்கடி மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

காட் பாடம் சம்பந்தமாகப் பல தரப்பார் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்புக்கு இடையே அந்தப் பாடம் தாய்மொழிப் பள்ளிகளில் நான்காம் வகுப்பில் இருந்து போதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பாடம் 6 பக்கத்திலிருந்து 3 பக்கமாகக் குறைக்கப்பட்டு, விருப்பப் பாடமாக ஆக்கப்பட்டது. போதனை எப்படி நடத்துவது என்பது ஆசிரியர்களைப் பொறுத்தாகும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker