Latestஉலகம்

கைதியின் வயிற்றில் பல் துலக்கும்  பிரஷ்: மருத்துவர் அதிர்ச்சி ! 

சீனா, ஆக. 13 – 20 ஆண்டுகள் முன்பு தற்கொலை செய்து கொள்ள பல் துலக்கும் பிரஷை விழுங்கிய கைதியின் வயிற்றிலிருந்து அது  வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றபட்ட அந்த பிரஷ் மிகவும் மோசமான நிலையில் கருமை நிறம்   படர்ந்திருந்ததாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே லீ(51வயது)  எனும் அந்நபர் வயிற்று வலியால் அவதியுற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் சிறைக் கைதியான அவர் 20 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்வதற்காக அந்த பிரஷை விழுங்கியதாகவும் கூறியுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள் ‘எண்டோஸ்கேன்’ மூலமாக அந்த பிரஷை சிறுகுடல் வழியாக வெளியே எடுத்துள்ளனர்.

HIV கிருமி தோற்று நோய் கண்டுள்ள அந்நபர் வலி தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயற்சித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker