Latestஇந்தியா

சகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த வீரர்:- மண்ணில் புதைந்த சோகம்!

கவளப்பாறை,ஆக.13-சகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த ராணுவ வீரர் மண்ணில் புதைந்த சோகம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு.இவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்பதால் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள விஷ்ணு ஆசையாய் ஊருக்கு வந்துள்ளார். ஆனால் பேரிடர் வீடு தேடி வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

கேரளாவின் வயக்காடு மாவட்டத்திலுள்ள கவளப்பாறை என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பல குடும்பங்கள் மண்ணில் புதைந்தன. அதில் விஷ்ணுவின் குடும்பமும் அதில் சிக்கி உள்ளது.மணப்பெண், தாய் ,தந்தை, சகோதரன் என அனைவரும் ஒரு சேர மண்ணில் புதைந்தனர்.

திருமண ஏற்பாடுகள் மகிழ்ச்சி பொங்கிய காணப்பட்ட குடியிருப்பு தற்போது வெறும் மணல் மேடாக மட்டுமே காட்சியளிக்கின்றன. இது வரை மணப்பெண் குடும்பத்தினரின் சடலம் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker