Latestமலேசியா

சிறுவன் மீது காரை தவறுதலாக ஏற்றிய உறவினர்:  2 வயது சிறுவன் பலி! 

லாஹாட் டத்து, ஆக 13 – காரின் டயர் தவறுதலாக இரண்டு வயது சிறுவன் மீது ஏறியததால், அவன் பரிதாபமாக உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம்  ஞாற்றுக்கிழமை கம்போங்  லோங்  டானாவ், சிலபூக்கான் எனுமிடத்தில் ஹரி ராயா ஹஜி பண்டிகையின்  போது நிகழ்ந்தது.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அச்சிறுவன் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

லாஹாட் டத்து போலீஸ்  துணை ஆணையர் நஸ்ரி மன்சோர் குறிப்பிடுகையில், சம்பவத்தின்போது அந்த சிறுவனின் உறவினர் (வயது 37 )  ஒருவர் வீட்டிற்குக் காரில் புறப்படுகையில் அவரின் இடது டயர்  எதையோ மோதி   விட்டதை உணர்ந்து வெளியே சென்று பார்த்து,  அதிர்ந்து போனார். அச்சிறுவன் டயரில் சிக்கியதை உணர்ந்து,  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அச்சிறுவன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker