Latestமலேசியா

ஜப்பானிய சுற்றுப்பயணியிடம்   காமச்சேட்டை : வேன் ஓட்டுனர் கைது ! 

கோத்தா கினபாலு, ஆக 13 – ஜப்பானிய மாதுவிடம் முறைகேடான வகையில் நடந்து கொண்ட வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தா கினாபாலுவில்  நிகழ்ந்துள்ளது.

கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஹபீபி மஜிஞ்சி குறிப்பிடுகையில், அங்குள்ள மசூதியொன்றை சுற்றி காண்பிப்பதற்காக அந்த வேன் ஓட்டுனரை அந்த ஜப்பானிய பெண் அணுகியதாகவும்,  திரும்பி வருகையில் பேருந்து  நிலையத்தில் விட்டு விட கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், புக்கிட் பெண்டெராவில் வேனை நிறுத்தி அப்பெண்ணிடம் காம சேட்டை புரிந்ததாக அந்த வேன் ஓட்டுனர் மீது அந்த சுற்றுப்பயணி புகார் வழங்கியுள்ளார்.
அச்சமயத்தில், உதவி கேட்டு அப்பெண் கத்தியதால், பயந்து போன அந்த ஆடவன் ஓடியுள்ளான்.

பின்னர் அப்பெண்  பொதுமக்களின் உதவியுடன்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக   ஹபீபி மேலும் குறிப்பிட்டார்.

அன்றிரவே   10 .30 மணியளவில்   ஜாலான் சுலைமான்  கடைதெருவின் முன் அந்த ஆடவனை, போலீசார்   மடக்கி பிடித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker