Latestமலேசியா

தம்பியைத் தவறுதலாகச்  சுட்ட அண்ணன் : கைது !  

சபா, ஆக 13 – தம்பியை தவறுதலாகச் சுட்டு மரணம் விளைவித்ததாக ஒப்புக்கொண்ட ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் உளு பங்காஸ் எனுமிடத்தில்  நிகழ்ந்துள்ளது. காட்டில் வேட்டையாடச் செல்லும்போது தன் 35 வயது  தம்பியை தவறுதலாகச் சுட்டதாக அந்த 41 வயது  ஆடவர்  ஒப்புக் கொண்டார்.

அந்த ஆடவன் சுயமாகத் தயாரித்த துப்பாக்கியால் சுட்டதாகவும், இறந்த அவரது தம்பியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கெனிங்காவ்  மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவரிடம் முறையான துப்பாக்கி உரிமம் இல்லாதது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு பிரிவு 302 இல் கீழ் விசாரிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker