Latestமலேசியா

நோரா ஆன்னின் தகவல் தருவோருக்கு- ரிம. 50,000 வெகுமதி

நீலாய், ஆக. 13 – நீலாய், விடுதி ஒன்றில் ஆகஸ்டு 4ஆம் தேதி காணாமல் போன நோரா ஆன் கியூஒரின் குடும்பத்தினர் அவர் சம்பந்தமான தகவலை அளிப்போருக்கு 50,000 ரிங்கிட் வெகுமதி அளிப்பதாக அறிவித்தனர்.

தமது மகளைத் தேடிக் கண்டுபிடிக்க உதவும் அந்தத் தகவலுக்கான வெகுமதியை பெல்பாஸ்டில் இருக்கும் ஒரு நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளதாகத் தாயார் மீப்த் ஜேசப்பின் கியூஒரின் தெரிவித்தார்.

அந்த 15 வயது சிறுமியைத் தேட போலீசார் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர்களின் தேடலுக்கு உதவியாக தாங்கள் அந்த வெகுமதியைத் தர முனவந்துள்ளதாக அவர் சிரம்பான் பந்தாய் போலீஸ் நிலையத்தில் அதனைத் தெரிவித்தார்.

விவரம் தெரிந்தோர் 0111-2285058 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

ஒன்பது நாளாக மேற்கொள்ளப்படும் தேடலில் மொத்தம் 353 பேர் கலந்து கொண்டனர். நோரா ஆன்னும் அவரது குடும்பத்தினரும் நெகிரி செம்பிலான் ரிசோர்ட்டிக்கு ஆகஸ்டு 3ஆம் தேதி இரண்டு வார விடுமுறையில் இங்கு வந்தனர்.

அடுத்த நாள் தங்கும் அறையிலிருந்து நோரா காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker