Latestமலேசியா

நோரா காணாமல் போன இடத்தில் சடலம் கண்டெடுப்பு !

நீலாய்.ஆக.13 – ஆகஸ்ட் 4 தேதி சிரம்பான் தங்கும் விடுதியிலிருந்து  காணாமல் போன ஐரிஷ்   நோரா ஹேனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர், குனோங் பெரெம்போனில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இன்று தேடும் பணியை மேற்கொண்டிருக்கும் போது சுமார் பிற்பகல் 1.57 மணியளவில் அச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான மாவட்ட போலீஸ் அதிகாரி டத்தோ முகமட் மாட் யுசோப் தெரிவித்தார்.

மேலும், நோரா காணாமல் போன இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் அச்சடலத்தை காணும் போது வெளிநாட்டவரின் சடலம் போல் தோற்றம் அளித்தாலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே அது அடையாளம் காணப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் அப்பெண்ணின் பெற்றோர்களும் விரைந்துள்ளனர்.
நோரா காணாமல் போய் 10 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்தவொரு தடயங்களும் கண்டறிப்படாத நிலையில், இப்பொழுது சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker