Latestமலேசியா

பாராங்கத்தி தாக்குதலில் பாட்டி கொலை – பேரன் படுகாயம்

ஷா ஆலம், ஆக. 13 – திங்கட்கிழமை சபாக் பெர்னம், கம்போங் தெலுக் பூலாயில் 5 முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து நடத்திய தாக்குதலில் பாட்டி ஒருவர் கொல்லப்பட்டு பேரன் படுகாயம் அடைந்தான்.

காலை 4 மணியளவில் நடந்த அந்தத் தாக்குதலில், பி.ருன்கண்ணகி (வயது 78) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் அவரின் பேரன் என்.சிலம்பரசன்(வயது 22)
கடுமையான காயத்துக்கு உள்ளானதாக சபாக் பெர்னம் மாவட்ட துணை ஆணையர் லிம் சே கூன் தெரிவித்தார்.

தேங்காய் விற்பனையாளரான பேரன், வீட்டிற்கு வெளியே ஆள்கள் நிற்பதைப் பாட்டியிடம் சொல்வதற்குள், கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து பாட்டியை வெட்டியதாகத் தெரிவித்தார்.

படுக்கையின் கிழே மறைந்து கொண்டு, பின்னர் வெளியே தப்பிக்க முயன்றபோது, அவரும் வெட்டப்பட்டு படும் காயத்துக்கு ஆளானார். அவரின் உடலின் பல பாகங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அதன் பின்னர் அந்த கொள்ளையர்கள் தோயோத்தா வியோஸ் காரில் தப்பித்துச் சென்றதாகவும் காரின் எண் பட்டை சரியாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சோதனையில் பணமோ அல்லது தங்க நகைகளோ திருடப்படவில்லை. மேலும், வெளியே நிறுத்தப்பட்ட வாகனத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.

அந்தத் தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker