Latestசினிமா

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா:- கஸ்தூரியை கடிந்தார்! கவினை கருவினார்

சென்னை,ஆக.13- பிக்பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சைக்குரிய சாக்‌ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் கஸ்தூரி தான் இனி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்கு வந்து மூன்று நாட்களாகவே எவ்வித சலசலப்பும் பாதிப்பும் இல்லை என்பதால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் இன்று அதிரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா. மேலும் சற்று முன் வெளியான புரோமோவில் போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார். அதில் முதலில் லாஸ்லியாவை அழைத்து நீ யார் என்று கண்டு பிடி. நானும் கண்டு பிடிக்கிறேன் என்கிறார்.

அதன்பின் கஸ்தூரியிடம் உங்ககிட்ட இருந்து யாரும் அதை எதிர்பார்க்கல. ஏன் திடீரென்று மாலை மாத்தற அளவுக்கு போயிட்டீங்க என்று கேட்டார்.அதன் பின் போட்டியாளர்களிடம் லவ்வும் வேணாம். மண்ணாங்கட்டியும் வேணாம் என்றார். எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடுங்க ஒன்றும் ஒரு காசுக்கு தேறாது என்று கூறினார்.

அதன்பிறகு கவினிடம் உங்க கிட்ட பேசணுன்னு நினைச்சேன் ஆனா இனிமேல் பேசமாட்டேன்.மனம் திறந்து சொல்றேன் ஒரு பிரயோசனமும் இல்லை என்று கவினை பார்த்து கூறியுள்ளார்.

தர்ஷன் உனக்கு பிக்பாஸ் டைட்டில் வேணுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தர்ஷன் முகம் சோகமாக காணப்பட்டு வேண்டாம் என்று சொல்கிறார். மீண்டும் இது பரிவுக்குரிய ஷோ அல்ல. டைட்டிலை கொடுத்து விட்டு கொடுத்து விட்டுப் போறதுன்னா வீட்டுக்கு கிளம்புங்கள் என்று அனைத்து போட்டியாளர்களையும் கடுமையாகப் பேசியுள்ளார்.

அவர் பேசியதைக் கேட்டு தர்ஷன் கோபத்தோடு கண்கலங்கி காணப்பட்டார்.
அதிகபட்சமாக இன்று ஒரு நாள் மட்டும் வனிதா பிக் பாஸ் வீட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker