Latestமலேசியா

மலேசியாவின் பொது கழிவறைகள் அசுத்தமாக இருப்பது வெட்கமளிக்கிறது – மகாதீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 13 – நம் நாட்டின் கழிவறைகள் அசுத்தமாகவும் தூர்நாற்றமாகவும் இருப்பதை பார்ப்பதற்கு தமக்கு வெட்கமாக இருப்பதாக பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். இது நம்மிடையே நன்னெறிப் பண்புகள் குறைந்து வருவதை காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நான் அடிக்கடி பொது கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்பதை  பரிசோதனை செய்ய போகும்போதெல்லாம் பெரும்பாலும் அவை தூர்நாற்றம் வீசுகின்றன.
இது நம்மிடையே உள்ள பண்பையும் பொறுப்புணர்ச்சி இல்லாமையையும் காட்டுகின்றது என இன்று நடைப்பெற்ற தேசிய குடியியல் மற்றும் குடியுரிமைக் கல்வி தொடக்க விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

நான் பிற நாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள பொது கழிவறைகள் சுத்தமாக இருப்பதை பார்க்கிறேன். இது அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதை காட்டுகின்றது. பிற நாட்டவர்கள் தங்கள் மீது வைக்கும் கண்ணோட்டத்தின் மீது அவர்கள் அக்கறை கொள்கின்றனர். அதுவே அவர்கள் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள தூண்டுகின்றது.

ஒழுங்கான நன்னெறிப் பண்புகள் இருப்பது அவசியம். அதனை புகட்டுவது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. மாறாக அவர்களுக்குள் அதை விதைப்பது அவசியம் என மகாதீர் கூறினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker