Latestசினிமா

முத்தையா முரளிதரன் படம்:- உள்ளே வெளியே ஆட்டம் போடும் விஜய் சேதுபதி

சென்னை,ஆக.13- தமிழர் -சிங்களர் குறித்த சர்ச்சைகள் எதுவும் இடம்பெறாமல் வெறுமனே கிரிக்கெட் குறித்த படமாக மட்டுமே உருவாக உள்ளதால் முத்தையா முரளிதரன் குறித்த பயோபிக் படத்தில் நடிப்பதிலிருந்து் தான் பின்வாங்கப் போவதில்லை என்று பல மறு பரிசீலனைக்கு பின் அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

ஒரு வாரத்துக்கு முன்பு அப்படத்தை விட்டு நிச்சயமாக வெளியேற இருக்கிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்த நிலையில் இன்னொரு முறை பல்டி அடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன்.

இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டது. ஆனால் முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
சமூக வலைதளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர் .வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என்று கூறிவிட்டனர். இதனால் இந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய்சேதுபதி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது .அவர் படத்தை விட்டு வெளியேறி விட்டாரென்று செய்திகள் வந்தன. இந்நிலையில் முரளிதரன் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக் படத்தில் தான் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இப்படம் யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர் டிலக்ஸ் ஹிட் படமானது. இப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் விருதை பெற்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker