Latestமலேசியா

முஸ்லிம் அல்லாதவர்களுக்காக – ஜாவி ரோமன் எழுத்துருவுக்கு மாற்றப்பட்டது

லங்காவி, ஆக. 13 – நாட்டில் மற்ற இனத்தவர்களின் நலனுக்கு அரசு மிகுந்த அக்கறை காட்டுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் நலனுக்காகவே ஜாவியில் இருந்த மலாய் மொழி எழுத்துருவை நோமனைஸ் எழுத்துருவாக மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடையும் கட்டத்தில் இருந்தபோது, ஜாவியில் எழுதுவதற்கு மலாய்க்காரர் அல்லாதோருக்கு சிரமமாக இருக்கும் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசு தாய்மொழிப் பள்ளிகளில் 3 பக்க ஜாவி-அரேபியை சித்திரப் பாடத்தை நான்காம் வகுப்பில் அமல்படுத்துவதை மலாய்க்காரர் அல்லாதோர் எதிர்ப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

லங்காவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அது பற்றிக் குறிப்பிட்டதோடு, கல்விப் பிரச்சினைகளில் சீன கல்வி சார்ந்த அமைப்பான டோங் சோங் விடாப்பிடியாக, எப்போதுனே எதிர்ப்பு காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker